அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது': கொளத்தூர் அதிமுக வேட்பாளர்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை: ''கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது,'' என, கொளத்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிராஜாராம் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: சென்னை, கொளத்துாரில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் இருவர் மீது, தி.மு.க., பகுதி செயலர் ஜ.சி.எப்., முரளி தாக்குதல் நடத்தி உள்ளார். தி.மு.க.,வினர், நேற்று முதல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது குறித்து,
TamilnaduElections, ADMK, Stalin, DMK, Kolathur, அதிமுக, ஸ்டாலின், வெற்றி, செல்லாது, திமுக, கொளத்தூர்

சென்னை: ''கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது,'' என, கொளத்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிராஜாராம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: சென்னை, கொளத்துாரில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் இருவர் மீது, தி.மு.க., பகுதி செயலர் ஜ.சி.எப்., முரளி தாக்குதல் நடத்தி உள்ளார். தி.மு.க.,வினர், நேற்று முதல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது குறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால், வாங்க மறுக்கின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தால், 'நீதிமன்றம் செல்லுங்கள்' என்கிறார். கொளத்துாரில், 2011 சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் விதிமுறைகளை மீறி, 30 லட்சம் ரூபாய் அதிகமாகசெலவு செய்தார். இது குறித்து, சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளார்.


latest tamil news


அந்த வழக்கு, தற்போது மேல் முறையிட்டுக்காக, உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டம் என்பதால், இரண்டு மாதம் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விபரங்களை, ஸ்டாலின் தன் வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார். ஸ்டாலின் வாயைத் திறந்தாலே, பொய் சொல்கிறார். கட்சிக்குதான், அவர் முதல்வர் வேட்பாளர். பொதுமக்களுக்கு, 'ஜோக்கர்'. விரைவில், '2011 தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது' என்று, தீர்ப்பு வெளியாகும். எனவே, இந்த தேர்தலில், அவர் வெற்றி பெற்றாலும், செல்லாததாக கருதப்படும். இதனால்தான், தன் மகனை, சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்துள்ளார். மேலும், ஸ்டாலின் குறித்த முக்கியமான விஷயத்தை, இன்று வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
10-ஏப்-202117:48:25 IST Report Abuse
dina கட்சிக்குதான், அவர் முதல்வர் வேட்பாளர். பொதுமக்களுக்கு, 'ஜோக்கர்'. அதையும் மீறி ஜெயித்தால் மக்கள் தான் ஜோக்கர்'. சிறிது கூட டவுட் வேண்டாம் .
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
08-ஏப்-202113:17:01 IST Report Abuse
S.Ganesan சுடாலின் ஜோக்கர் அல்ல.2011 ம் ஆண்டு நடந்த தேர்தல் செல்லாது என்று இப்போது நீதி மன்றம் அறிவிப்பது மூலம் என்ன பயன் ? இது வோட்டு போட்ட மக்களை ஜோக்கர் என்று நிரூபிக்கும் முயற்சி
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஏப்-202101:47:41 IST Report Abuse
தல புராணம் 2011 சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் விதிமுறைகளை மீறி, 30 லட்சம் ரூபாய் அதிகமாக செலவு செய்தார். இது குறித்து, சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். - அதுக்குள்ளே என்ன அவசரம், இன்னும் கால் நூற்றாண்டு போகட்டும் என்கிறது நமது நீதிமன்றம்.. அப்படியே தீர்ப்பு வந்தாலும் 2011 தேர்தல் முடிவு செல்லாதுன்னு தீர்ப்பு வழங்குவார்கள். கவலையே வேண்டாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X