எங்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை: ஸ்டாலின்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (149) | |
Advertisement
சென்னை: ஆளும்கட்சியினர் தோல்வி பயத்தால், மக்களை திசைதிருப்ப, திமுக மீதான பொய்யான செய்திகளை விளம்பரமாக கொடுத்துள்ளனர், ஆனால் எங்கள் மீதான புகார்கள் எதுவும் வழக்கு போட்டு நிரூபிக்கப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தின்போது குறிப்பிட்டார். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து ஐஸ் அவுஸ் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின்
TamilnaduElections, DMK, Stalin, Udhayanithi, Advertisement, தமிழகம், திமுக, ஸ்டாலின், உதயநிதி, பிரசாரம், பொய், விளம்பரம்

சென்னை: ஆளும்கட்சியினர் தோல்வி பயத்தால், மக்களை திசைதிருப்ப, திமுக மீதான பொய்யான செய்திகளை விளம்பரமாக கொடுத்துள்ளனர், ஆனால் எங்கள் மீதான புகார்கள் எதுவும் வழக்கு போட்டு நிரூபிக்கப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தின்போது குறிப்பிட்டார்.சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து ஐஸ் அவுஸ் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:


இப்போது நான் உதயநிதிக்காக ஓட்டுக்கேட்டு வந்தது, ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட்டபோது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்தது நினைவுக்கு வருகிறது. எனது மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, எதுவும் கிடைக்காமல், கூடுதலாக 20 சீட்டுகள் நமக்கு (திமுக) கிடைக்கும் என கூறினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடத்தலாம். ஆனால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ரெய்டு நடத்தி பா.ஜ., மிரட்ட நினைக்கிறது.latest tamil newsஆளும்கட்சி, கூட்டணி கட்சியினர் தோல்வி பயத்தால், அனைத்து பத்திரிகைகளிலும், திமுக மீது குற்றச்சாட்டு கூறி விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில் கூறியவைகள் உண்மை என்றால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அது தொடர்பாக வழக்கு போட்டிருக்கலாம், தண்டனை பெற்று தந்திருக்கலாம். ஆனால் வழக்கு போடவும் இல்லை, நிரூபிக்கப்படவும் இல்லை.சசிக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி


பொய்யான செய்திகளை எடுத்து விளம்பரமாக கொடுத்துள்ளனர். அதுவும் செய்தி போலவே விளம்பரமாக கொடுத்துள்ளனர். இப்படியான விளம்பரத்தை வெளியிட்டு மக்களை திசைதிருப்ப முயற்சிக்கும் அவர்களுக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுப்பர். முதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவிக்கு வந்தவர். அவருக்கே துரோகம் செய்த பழனிசாமிக்கு பாம்பு, பல்லியை விட விஷம் அதிகம். இ20 நாளில் 234 தொகுதிகளிலும் 12 ஆயிரம் கிலோமீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த தேர்தல், நம் தன்மானம், சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஏப்-202106:45:23 IST Report Abuse
S.Balakrishnan உங்கள் அராஜக அரசியலை பரோட்டா கடை முதல் பியூட்டி பார்லர் வரை நிரூபித்தவர்கள். உங்கள் அநாகரிக அரசியலை பெண் இனத்தைக் கொச்சை படுத்தி பேசி நிரூபித்தவர்கள்.உங்கள் ஆணவ அரசியலை அப்பாவிகளை மிரட்டி ஓட்டு கேட்டு அடித்து நிரூபித்தீர்கள். கொள்ளை அடிப்பதை கோயபல்ஸ் தத்துவத்தை கையாண்டு சமாளிக்கிறீர்கள்.மத கலாச்சாரத்தை வேல் பிடித்து போட்டோ எடுத்து காட்டிக் கொள்கிறீர்கள்.இப்படி உங்கள் ஈனத் தனமான இழி செயலுக்கு வெட்கப்படாமல் விளம்பரம் தேடிக் கொள்கிறீர்கள். நீங்கள் கொள்ளை அடிக்க, உங்கள் குடும்பம் சொத்து சேர்க்க நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறீர்கள்.விழிப்புணர்வு பெற்ற தமிழ் சமுதாயம் உங்களை மன்னிக்காது.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
05-ஏப்-202105:39:53 IST Report Abuse
thulakol இவருக்கு கடைசி காலத்தில் அப்பன் மாதிரி போஜனம் கிடைப்பது கஷ்டம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-ஏப்-202104:55:51 IST Report Abuse
NicoleThomson மூலபத்திரம் முதல் சாதிக் வரை பார்த்துக்கொண்டு தான் இருந்துள்ளோம் ஸ்டாலின்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X