'எச்-1பி' சம்பளம் உயர்வு: மக்களிடம் கருத்துக்கேட்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில் 'எச் - 1பி' உள்ளிட்ட விசாக்களுடன் பணியாற்றுவோருக்கான சம்பள அளவில் மாற்றம் செய்வது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச் - 1பி எச் -1பி1 இ - 3 போன்ற விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதில் எச் - 1பி விசாவை இந்தியர்களும் சீன நாட்டினரும் அதிக அளவில் பெற்று

வாஷிங்டன் : அமெரிக்காவில் 'எச் - 1பி' உள்ளிட்ட விசாக்களுடன் பணியாற்றுவோருக்கான சம்பள அளவில் மாற்றம் செய்வது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச் - 1பி எச் -1பி1 இ - 3 போன்ற விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதில் எச் - 1பி விசாவை இந்தியர்களும் சீன நாட்டினரும் அதிக அளவில் பெற்று பயன்அடைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க இளைஞர்கள் பலர் வேலைகளை இழந்து தவித்தனர். எச் - 1பி விசா வாயிலாக வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்தில் பணியில் நியமிப்பதாக அமெரிக்க நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து எச் - 1பி விசா பெற பல்வேறு கட்டுப்பாடுகளை அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார்.அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில் எச் - 1பி விசாவுடன் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதால் நீதிமன்றம் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.பின் அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் எச் - 1பி உள்ளிட்ட விசாக்களுடன் பணியாற்றுவோருக்கான சம்பள அளவில் மாற்றம் செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் அந்த சம்பள அளவை நிர்ணயிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கக்கோரி அமெரிக்க தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X