கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லம் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், நிலம் கையகப்படுத்தப் பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது. இல்லம் மற்றும் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக, 68 கோடி ரூபாய் நிர்ணயித்து, சென்னை

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், நிலம் கையகப்படுத்தப் பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது. இல்லம் மற்றும் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக, 68 கோடி ரூபாய் நிர்ணயித்து, சென்னை சிவில் நீதிமன்றத்தில் செலுத்தியது.இதை எதிர்த்து, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட அவரது சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இம்மனுக்கள், நீதிபதி சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தன.

மனுக்கள் நிலுவையில் இருக்கும் போதே, நினைவு இல்லத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது.இதையடுத்து, நினைவு இல்ல திறப்பு நிகழ்ச்சியை நடத்த அனுமதித்த உயர் நீதிமன்றம், பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட தடை விதித்தது.பின், பிரதான வழக்கின் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, நீதிபதி சேஷசாயி தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X