கோவை சாலையில் கம்பிகள் உடைப்பு; விபத்து ஏற்படும் அபாயம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கரூர்: 'கரூர்-கோவை சாலையில் உடைந்துள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையின் நடுவே, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல இடங்களில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் உள்ளன. கோவை சாலையில் நாள்தோறும், நூற்றுக்கணக்கான லாரிகள்,

கரூர்: 'கரூர்-கோவை சாலையில் உடைந்துள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையின் நடுவே, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல இடங்களில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் உள்ளன. கோவை சாலையில் நாள்தோறும், நூற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதை தவிர, இருசக்கரவாகனங்களிலும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால், கோவை சாலையில் நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், விபத்தின் மூலம் பொதுமக்கள் படுகாயமடைவது தொடர்கதையாக உள்ளது. எனவே, கரூர்- கோவை சாலையில் உடைந்த நிலையில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X