அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: நட்டா

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், அதிமுக தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தெரிவித்து உள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த நட்டா கூறியதாவது: தமிழகத்தில், அதிமுக தலைமையில், நாங்கள் ஆட்சி அமைப்போம். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மே.வங்கத்தில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், பா.ஜ., வெற்றி
bjp, jb nadda, Nadda, Tamilnadu, Westbengal, assam, Congress, BJP, DMk, pondycherry, election,பாஜ, நட்டா, ஜேபி நட்டா, தமிழகம், அதிமுக, காங்கிரஸ், திமுக, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம்,

சென்னை: தமிழகத்தில், அதிமுக தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த நட்டா கூறியதாவது: தமிழகத்தில், அதிமுக தலைமையில், நாங்கள் ஆட்சி அமைப்போம். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மே.வங்கத்தில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அறிகுறி தெரிய வந்துள்ளது. அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீடிக்கும். புதுச்சேரியில், நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான தெளிவான சூழ்நிலை உருவாகி உள்ளது.


latest tamil news


கேரளாவில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ஜ., வளர்ந்துள்ளது. கேரளாவில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தவறான நிர்வாகத்தால், நாங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளோம். மக்கள் பா.ஜ.,வை ஆதரிக்க துவங்கி உள்ளனர். இதனால், எங்களால் கேரளாவிற்கு நாங்கள் நல்லது செய்வோம்.

நாங்கள் மதவாத கட்சி என முத்திரை குத்துகின்றனர். ஆனால்,உண்மையில் காங்கிரஸ் தான். கேரளாவில் முஸ்லிம்லீக் கட்சியுடனும், அசாமில் பத்ருதீனுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. ஒரு மதத்தை பரப்புவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என முஸ்லிம்லீக் கூறுமா. இதனால், யார் மதவாத கட்சி என்பதை சிந்திக்க வேண்டும்.

தேசிய கட்சியான காங்கிரஸ் பிராந்திய பிரச்னைகளை புறக்கணித்துள்ளது. தற்போது, அக்கட்சி திமுகவை பின்தொடர்கிறது. மாறாக பா.ஜ., பிராந்திய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், காங்கிரஸ் ஜல்லிக்கட்டை தடை செய்த போது, திமுக அதனை வேடிக்கை பார்த்தது. ஆனால், பிரதமர் மோடிதான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
05-ஏப்-202111:07:34 IST Report Abuse
pattikkaattaan /// தமிழகத்தில், அதிமுக தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் /// H. ராஜாதான் துணை முதல்வர் .. இது எப்படி இருக்கு
Rate this:
Cancel
ravi - coimbatore,இந்தியா
05-ஏப்-202109:49:03 IST Report Abuse
ravi அதிமுக வந்தால் தமிழ்நாட்டில் ஒரு தமிழனுக்கு வேலை கிடைக்காது அது மட்டும் உண்மை.. வடநாட்டு காரன் தான் தமிழ்நாட்டை எல்லா துறையிலும் ஆள்வான்..
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
05-ஏப்-202108:17:12 IST Report Abuse
arudra1951 நீங்க சொன்னதை செய்யுங்கள் தமிழ் நாட்டு தமிழர்கள் பிஜேபிக்கு கோவில் கட்டி கும்பிடுவோம் அய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X