சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்முகத்தில் சுருக்கம் ஏன்நமக்கு அழகு சேர்ப்பதில் முகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வயது கூடும் போது, முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் உடல் தோலுக்கு அருகில் உள்ள பல முக்கிய பாகங்களில், கொலாஜன் என்பதும் ஒன்று. இது மூன்று வகைகளில் உள்ளன. முதல் வகையில் கொலாஜன் 80 சதவீதம் உள்ளது. இது தோலுக்கு அண்மையிலுள்ள எலும்புகள், தசை நார்கள் ஆகியவற்றில்

அறிவியல் ஆயிரம்
முகத்தில் சுருக்கம் ஏன்

நமக்கு அழகு சேர்ப்பதில் முகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வயது கூடும் போது, முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் உடல் தோலுக்கு அருகில் உள்ள பல முக்கிய பாகங்களில், கொலாஜன் என்பதும் ஒன்று. இது மூன்று வகைகளில் உள்ளன. முதல் வகையில் கொலாஜன் 80 சதவீதம் உள்ளது. இது தோலுக்கு அண்மையிலுள்ள எலும்புகள், தசை நார்கள் ஆகியவற்றில் உள்ளது. இதுவே தோலை தடிப்பாகவும், முறுக்காகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. வயது அதிகரிக்கும் போது அவர்களுக்கு இந்த கொலாஜன் அளவு குறைவதால் தோல் சுருங்குகிறது.

தகவல் சுரங்கம்
தேசிய கடல்சார் தினம்

இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான 'எஸ்.எஸ்.லாயல்டி', 1919 ஏப்.5ல் மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் அந்நாளே தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வெளிநாட்டு ஏற்றுமதியில் 90 சதவீதம் துறைமுகம் மூலமே நடைபெறுகிறது. இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X