பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று 3 நாளாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (ஏப்.,4) 3,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் பாதிப்பு 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.இதுவரை 8.65 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று 3 நாளாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (ஏப்.,4) 3,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் பாதிப்பு 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.



latest tamil news



இதுவரை 8.65 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,4) 3,581 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-190) மூலமாக, இன்று மட்டும் 82,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 99 லட்சத்து 32 ஆயிரத்து 179 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,170பேர் ஆண்கள், 1,411 பேர் பெண்கள் என பாதிக்கப் பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,43,189 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,56,582 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 1,813 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 071 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,778 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஏப்-202106:19:34 IST Report Abuse
D.Ambujavalli இன்னும் பத்து நாள் கழித்து, உலக அளவில் தமிழகம் முதலிடம் அடைந்துவிடும் பின்னே, பிரசாரத்துக்கு வந்த லட்சக்கணக்கானவர்கள் என்று பீற்றிக்கொண்டவர்கள் எத்தனைபேர் தொற்று உள்ளவர்களோ, எத்தனை பேர் பரப்பாளர்களோ? பரப்புரைகள் பலன் கைமேல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X