ஒரு நாள் கொரோனா பாதிப்பு; அமெரிக்காவை முந்தியது இந்தியா| Dinamalar

ஒரு நாள் கொரோனா பாதிப்பு; அமெரிக்காவை முந்தியது இந்தியா

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: தினசரி சராசரி கொரோனா பாதிப்பில், நம் நாடு, அமெரிக்காவை முந்தியுள்ளது. கடந்த வாரத்தில், அமெரிக்காவின் தினசரி கொரோனா பாதிப்பு, சராசரியாக, 65 ஆயிரத்து, 753 ஆக உள்ளது. நம் நாட்டில், அது, 68 ஆயிரத்து, 969 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன்படி, ஒருவார கால சராசரியில், இந்தியாவில் புதிய பாதிப்புகள் அதிகம் பதிவாகி உள்ளன. பிரேசிலில் இந்த கணக்கீடு, 72 ஆயிரத்து, 151 ஆக உள்ளது.தற்போதைய
Corona Virus, India, America, US, Covid 19

புதுடில்லி: தினசரி சராசரி கொரோனா பாதிப்பில், நம் நாடு, அமெரிக்காவை முந்தியுள்ளது. கடந்த வாரத்தில், அமெரிக்காவின் தினசரி கொரோனா பாதிப்பு, சராசரியாக, 65 ஆயிரத்து, 753 ஆக உள்ளது. நம் நாட்டில், அது, 68 ஆயிரத்து, 969 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதன்படி, ஒருவார கால சராசரியில், இந்தியாவில் புதிய பாதிப்புகள் அதிகம் பதிவாகி உள்ளன. பிரேசிலில் இந்த கணக்கீடு, 72 ஆயிரத்து, 151 ஆக உள்ளது.தற்போதைய நிலை நீடித்தால், உலகில் தினசரி பாதிப்பு அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில், நாம் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.கடந்த, 24 மணி நேரத்தில், 11.67 லட்சம் பேரிடம் நடந்த பரிசோதனைகளின் முடிவில், 93 ஆயிரத்து, 249 பேரிடம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இது, இந்த ஆண்டில் பதிவான, ஒருநாள் அதிகபட்ச பாதிப்பாக உள்ளது.

இவர்களுடன், இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 24 லட்சத்து, 85 ஆயிரத்து, 509 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவில் இருந்து ஒரு கோடியே, 16 லட்சத்து, 29 ஆயிரத்து, 289 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த, 25 நாட்களாக, புதிய பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனால் தற்போது, 6.91 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில், 513 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 277 இறப்புகள் பதிவாகி உள்ளன. இவர்களுடன் இதுவரையிலான கொரோனா இறப்பு, ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 623 ஆக அதிகரித்துள்ளது.மஹாராஷ்டிராவில், 55 ஆயிரத்து, 656 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் தொடர்கிறது.

அடுத்ததாக தமிழகத்தில், 12 ஆயிரத்து, 764 பேரும், கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 610 பேரும் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மஹா., பஞ்சாபில் அதிகம் மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் பதிவாகும், புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மிக அதிகமாக உள்ளது.

கடந்த மாதத்தின் கடைசி இரு வாரங்களில், மஹாராஷ்டிராவில், 4.26 லட்சம் பேரும், பஞ்சாபில், 35 ஆயிரத்து, 754 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இம்மாநிலங்களைத் தொடர்ந்து, சண்டிகர், சத்தீஸ்கர் மற்றும் குஜராதில், வைரஸ் பரவல் வேகம் கணிசமாக உயர்ந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X