தமிழ்நாடு

தீர்ப்பு! 21.41 லட்சம் வாக்காளர்கள் நாளை......9 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை 6ம் தேதி நடக்கிறது. பிரசாரம் நேற்று இரவு 7:00 மணியுடன் முடிவடைந்தது. கொரோனா பரவலையொட்டி, வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்ததுடன், ஓட்டுப் பதிவு நேரத்தையும் 2 மணி நேரம் கூடுதலாக தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.அதன்படி, அன்று காலை 7:00 மணி
 தீர்ப்பு!  21.41 லட்சம் வாக்காளர்கள் நாளை......9 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை 6ம் தேதி நடக்கிறது. பிரசாரம் நேற்று இரவு 7:00 மணியுடன் முடிவடைந்தது.

கொரோனா பரவலையொட்டி, வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்ததுடன், ஓட்டுப் பதிவு நேரத்தையும் 2 மணி நேரம் கூடுதலாக தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.அதன்படி, அன்று காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 55 ஆயிரத்து 291, பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 86 ஆயிரத்து 436, மூன்றாம் பாலினத்தவர் 208 பேர் என, மொத்தம் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, திட்டக்குடி (தனி) தெகுதியில் 2,18,971 வாக்காளர்கள், விருத்தாசலம் 2,51,703, நெய்வேலி 2,17,888, பண்ருட்டி 2,44,711, கடலுார் 2,38,364, குறிஞ்சிப்பாடி 2,42,585, புவனகிரி 2,48,257, சிதம்பரம் 2,50,735, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 2,28,721 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக திட்டக்குடி (தனி) தொகுதியில் 305 ஓட்டுச்சாவடிகள், விருத்தாசலத்தில் 355, நெய்வேலியில் 299, பண்ருட்டியில் 341, கடலுாரில் 343, குறிஞ்சிப்பாடியில் 336, புவனகிரியில் 350, சிதம்பரத்தில் 354, காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் 318 ஓட்டுச் சாவடிகள் என மொத்தம் 3,001 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 400 பேர் ஈடுபட உள்ளனர். மேலும், கல்லுாரிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. துணை ராணுவத்தினர், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போலீசார் என, 5,510 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். திட்டக்குடி தொகுதியில் 15 பேர், விருத்தாசலம் 29, நெய்வேலி 12, பண்ருட்டி 15, கடலுார் 15, குறிஞ்சிப்பாடி 12, புவனகிரி 14, சிதம்பரம் 11, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 13 பேர், என, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - காங்., - அ.ம.மு.க., - தே.மு.தி.க., - வி.சி., உள்ளிட்ட பிரதான கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என, மொத்தம் 136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், 9 தொகுதிகளிலும் யார், யார் எம்.எல்.ஏ., என்பதை தேர்வு செய்ய 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் நாளை தீர்ப்பளிக்க உள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடக்கிறது. கடலுார், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தேவனாம் பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லுாரியிலும், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கு பனிக்கன்குப்பம் அண்ணா பொறியியல் கல்லுாரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியிலும், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி தொகுகளுக்கான ஓட்டு எண்ணிக்கை சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியிலும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X