அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
புவனகிரி : கம்மாபுரம் ஒன்றியம் ஒன்றிய கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் சரவணன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார். புவனகிரி தி.மு.க., வேட்பாளர் சரவணன் எம்.எல்.ஏ., கம்மாபுரம் தெற்கு ஒன்றிய கிராமங்களில் வடக்குவெள்ளூர், பழைய நெய்வேலி, மேல்பாதி மற்றும் வடக்கு ஒன்றிய கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரித்தார். அவருக்கு தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் சால்வை அணிவித்து, பெண்கள் ஆரத்தி

புவனகிரி : கம்மாபுரம் ஒன்றியம் ஒன்றிய கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் சரவணன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.

புவனகிரி தி.மு.க., வேட்பாளர் சரவணன் எம்.எல்.ஏ., கம்மாபுரம் தெற்கு ஒன்றிய கிராமங்களில் வடக்குவெள்ளூர், பழைய நெய்வேலி, மேல்பாதி மற்றும் வடக்கு ஒன்றிய கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரித்தார். அவருக்கு தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் சால்வை அணிவித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொகுதி செயலாளர் தொழிலதிபர் வாசு ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராயர், திருமாவளவன், டாக்டர் குமரகுரு, பொறியாளர் சுமதிசரவணன், மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, அவைத்தலைவர் சுந்தரபாண்டியன், த.வா.க., மாவட்ட செயலாளர் அறிவழகன், ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

சரவணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் வந்ததும், அ.தி.மு.க.,வினால் வஞ்சிக்கப்பட்ட புவனகிரி தொகுதியின் வளர்ச்சிப்பணிகள் துரிதமாக நிறைேவற்றப்படும். தமிழக மக்களின் எழுச்சியைக் கண்டு எடப்பாடிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அ.தி.மு.க., வின் மீது பா.ஜ., சவாரி செய்து தமிழகத்தில் கால் ஊன்ற கனவு காண்கின்றனர். ஒருபோதும் அவர்கள் கனவு பலிக்காது. எனக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X