சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி வாலிபருக்கு வெட்டு வேப்பூர் அருகே பரபரப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வேப்பூர் : வேப்பூர் அருகே வாலிபரிடம் கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து, அவரது தலையில் வெட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 32. இவர், கடந்த 2ம் தேதி இரவு உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை -

வேப்பூர் : வேப்பூர் அருகே வாலிபரிடம் கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து, அவரது தலையில் வெட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 32. இவர், கடந்த 2ம் தேதி இரவு உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த கொளப்பாக்கம் வந்த போது, மோட்டார் பைக் பழுதானது. இதனால், சாலை யோரம் பைக்கை நிறுத்தி விட்டு, பஸ் நிறுத்தத்தில் துாங்கினார். பின்னர், காலை 6:00 மணியளவில் எழுந்து பைக்கை தள்ளிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே வந்த இரண்டு மர்மநபர்கள், ஏழுமலையின் தலையில் வெட்டி விட்டு, அவரது கழுத்திலிருந்த கவரிங் செயின், செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்தவர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X