நெய்வேலி : நெய்வேலி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனின் மனைவி சிறுதொண்டமாதேவி, சத்திரம், கிழகுப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முந்திரி மற்றும் பலா பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது பெண் தொழிலாளர்கள் அனைவரும் அவரை வரவேற்று ஆதரவை தெரிவித்தனர். சபா ராஜேந்திரன் மனைவியிடம், கொரோனா பேரிடர் காலத்தில் உங்கள் கணவர் உயிருக்கு பயப்படாமல் அவரது சொந்த செலவில் நேரில் வந்து எங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வந்தார்.எங்கள் பகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் இணைப்பு மற்றும் எங்களது கிராமங்களில் ஏரி மற்றும் குளங்களை துார் வாரியது போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுத்துள்ளார்.
எனவே எங்களுடைய ஓட்டுகள் சபா ராஜேந்திரனுக்கு தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நெய்வேலி அடுத்துள்ள வேகாக்கொல்லை கிராமத்தில் உள்ள முந்திரி ஆலையில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களிடம் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனின் மனைவி ஓட்டு சேகரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE