அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., -பா.ஜ.,வின் பினாமியாகிவிட்டது அ.ம.மு.க, வேட்பாளர் கவுதம் சாகர் சாடல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
செஞ்சி : ஜெ.,வை ஊழலின் சின்னம் எனக் கூறிய பா.ம.க.,விற்கு உண்மையான அ.தி.மு.க., தொண்டன் ஓட்டு போடமாட்டான் என செஞ்சி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் பேசினார். செஞ்சி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் நேற்று அத்தியூர், அணையேறி, பொன்னங்குப்பம், துத்திப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ள

செஞ்சி : ஜெ.,வை ஊழலின் சின்னம் எனக் கூறிய பா.ம.க.,விற்கு உண்மையான அ.தி.மு.க., தொண்டன் ஓட்டு போடமாட்டான் என செஞ்சி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் பேசினார்.

செஞ்சி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் நேற்று அத்தியூர், அணையேறி, பொன்னங்குப்பம், துத்திப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ள பா.ஜ., அரசு பணக்காரர் களுக்கான அரசு, வட நாட்டுக்காரர்களை வாழ வைக்கும் அரசு. தமிழகத்தில், தமிழனுக்கு கொளுத்தும் வெயிலில் 100 நாள் வேலை. வட நாட்டுக்காரர்களுக்கு வங்கியிலும், மின் வாரியத்திலும், என்.எல்.சி.,யிலும் ஏ.சி., யில் வேலை.பா.ஜ., தனது அதிகாரத்தால் அ.தி.மு.க., வை இரண்டாக உடைத்தது. ஒருவர் தர்மயுத்தம் செய்தார். இப்போது அ.தி.மு.க., பா.ஜ.,வின் பினாமி கட்சியாகிவிட்டது.

பா.ஜ., எது சொன்னாலும் இரண்டு பேரில் யார் முதலில் தலையாட்டுவது என்பதில் போட்டி நடக்கிறது. இனி இவர்களால் தமிழகத்திற்கு அவமானம் தான் கிடைக்கும். இழந்த தன்மானத்தை மீட்க தினகரன் முதல்வராக வேண்டும்.சட்டசபையில் ஜெ., படத்தை திறந்த போது ஜெ., ஊழலின் சின்னம் என்று பா.ம.க., தலைவர் ராமதாஸ் சொன்னார். அப்படி சொன்ன பா.ம.க.,வுடன் கூட்டணி வைத்து ஓட்டு கேட்பதற்கு பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்படும் பழனிசாமிக்கும், ஓ.பி.எஸ்., சுக்கும் வேண்டுமானால் வெட்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அ.தி.மு.க., தொண்டன் இதை மன்னிக்க மாட்டான். ஜெ., வை அவமரியாதை செய்த பா.ம.க., விற்கு ஓட்டு போட மாட்டான்.நான் உங்களோடு இருப்பேன். உங்களுக்காக உழைப்பேன் எனக்கு வாய்ப்பளியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார். இதில் தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் தயாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X