அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரிக்கும்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அராஜகம் அதிகரித்து விடும்' என அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., அருண்மொழிதேவன் பேசினார். விருத்தாசலத்தில் பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, அவர், பேசியதாவது: விருத்தாசலம் தொகுதியில் குடிநீர், சாலை வசதி, மேம்பாலங்கள், மணிமுக்தாற்றில் தடுப்பணைகள் என கோடிக்கணக்கில் நலத்திட்டங்கள்

விருத்தாசலம் : 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அராஜகம் அதிகரித்து விடும்' என அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., அருண்மொழிதேவன் பேசினார்.

விருத்தாசலத்தில் பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, அவர், பேசியதாவது: விருத்தாசலம் தொகுதியில் குடிநீர், சாலை வசதி, மேம்பாலங்கள், மணிமுக்தாற்றில் தடுப்பணைகள் என கோடிக்கணக்கில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மீண்டும் தொடர்ந்திட பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயனுக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டுபோட்டு, வெற்றி பெறச் செய்ய வேண்டும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அராஜகம் அதிகரித்து விடும். தி.மு.க.,வினர் பெண்களை மதிப்பதில்லை, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

அவர்களை தட்டிக்கேட்கவோ, நடவடிக்கை எடுக்கவோ ஸ்டாலினுக்கு தைரியமில்லை. எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர். அவர் மீண்டும் முதல்வராக, பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல், நகர செயலாளர் விஜயகுமார், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், த.மா.கா., அசோக்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X