செஞ்சி வளர்ச்சி பெற வாய்ப்பு தாருங்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

செஞ்சி வளர்ச்சி பெற வாய்ப்பு தாருங்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேண்டுகோள்

Added : ஏப் 04, 2021
Share
செஞ்சி : செஞ்சியில் அரசு கல்லுாரி கொண்டு வருவேன் என செஞ்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபதி பிரசாரம் செய்தார். செஞ்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபதி நேற்று செஞ்சி ராஜேந்திரா நகரில் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது.செஞ்சி நகர மக்கள் அ.தி.மு.க.; தி.மு.க., வுக்கு மாறி மாறி ஓட்டுப் போட்டு எந்த பலனையும்

செஞ்சி : செஞ்சியில் அரசு கல்லுாரி கொண்டு வருவேன் என செஞ்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபதி பிரசாரம் செய்தார்.

செஞ்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபதி நேற்று செஞ்சி ராஜேந்திரா நகரில் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது.செஞ்சி நகர மக்கள் அ.தி.மு.க.; தி.மு.க., வுக்கு மாறி மாறி ஓட்டுப் போட்டு எந்த பலனையும் அனுபவிக்க வில்லை. நகரில் ஒரு கல்லுாரியைக் கூட கொண்டு வரவில்லை. நகர மக்களுக்கு முழுமையாக குடிநீர் கிடைக்கவில்லை. சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. கழிவு நீர் கால்வாய் உடைந்து தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அ.தி.மு.க., தி.மு.க., விற்கு மக்கள் மீது அலட்சியம் வந்துவிட்டது.

மக்களை மதிக்காதவர்களுக்கு பாடம் கற்பிக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.மக்கள் நீதி மய்யம் வென்றால் செஞ்சியில் அரசு கல்லூரி கொண்டு வருவேன். செஞ்சிக் கோட்டை அகழிகளை துார் வாரி சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி விட நடவடிக்கை எடுப்பேன். நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.செஞ்சி தொகுதி வளர்ச்சி பெற மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு ஸ்ரீபதி பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X