அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் முகமது உஸ்மான் தி.மு.க., அய்யப்பனுக்கு ஆதரவு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனுக்கு, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் முகமது உஸ்மான் ஆதரவு தெரிவித்தார். கடலுார் தொகுதியில் போட்டியிடும் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் முகமது உஸ்மான் தனது ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று நேற்று தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனை நேரில் சந்தித்து ஆதரவு

கடலுார் : கடலுார் தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனுக்கு, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் முகமது உஸ்மான் ஆதரவு தெரிவித்தார்.

கடலுார் தொகுதியில் போட்டியிடும் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் முகமது உஸ்மான் தனது ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று நேற்று தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் செல்வி வேல்முருகன் தலைமையில் வண்டிப் பாளையத்தைச் சேர்ந்த 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி வேட்பாளர் அய்யப்பன் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.

அய்யப்பன் பேசுகையில், 'நான் பிரசாரம் துவங்கியதில் இருந்து அ.தி.மு.க., மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க., வில் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக கடலுார் மக்களுக்கு நான் செய்து வரும் சேவைகளால் அமோக ஆதரவுடன் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பாடுபடுவேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X