அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்து ஆண்டில் இழந்ததை ஓராண்டில் மீட்டெடுப்பேன்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி தொகுதி கடந்த 10 ஆண்டுகளில் இழந்ததை ஓராண்டில் மீட்டெடுப்பேன் என தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் பிரசாரம் செய்தார். செஞ்சி நகர பகுதியில் தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் நேற்று இறுதிகட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.தமிழகத்தில் ஆளும் கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தமிழகத்தில் நல்லாட்சி தரும் நம்பிக்கை மிக்க தலைவராக ஸ்டாலின் உருவாகி

செஞ்சி : செஞ்சி தொகுதி கடந்த 10 ஆண்டுகளில் இழந்ததை ஓராண்டில் மீட்டெடுப்பேன் என தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் பிரசாரம் செய்தார்.

செஞ்சி நகர பகுதியில் தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் நேற்று இறுதிகட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.தமிழகத்தில் ஆளும் கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தமிழகத்தில் நல்லாட்சி தரும் நம்பிக்கை மிக்க தலைவராக ஸ்டாலின் உருவாகி உள்ளார். முதல்வர் பழனிசாமி தமிழகத்தை ஆள்வதிலும், கட்சியை நடத்துவதிலும் படுதோல்வி அடைந்து விட்டார். பா.ஜ., வை விட்டு தி.மு.க.,வை மிரட்டி பார்க்கிறார்.அ.தி.மு.க., வை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது.

தி.மு.க., ஆட்சி வந்ததும் செஞ்சி தொகுதி 10 ஆண்டுகள் பின் தங்கி போனதை ஒரே ஆண்டில் மீட்டெடுப்பேன்.தி.மு.க., ஆட்சியில் தொகுதிக்கு விவசாய கல்லுாரி, விதைப்பண்ணை கொண்டு வருவேன். செஞ்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தப்படும்.மேல்மலையனுாரில் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு அனைத்து வசதிகளும் கூடிய விடுதிகள் கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில் ம.தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் மணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் காஜா நஜீர், நிர்வாகிகள் கணேசன், ஏழுமலை, மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X