கோணாங்குப்பம் அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் கொண்டாடிய பிரேமலதா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோணாங்குப்பம் அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் கொண்டாடிய பிரேமலதா

Added : ஏப் 04, 2021
Share
விருத்தாசலம் : கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில், பிரேமலதா ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினார். விருத்தாசலம் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா, வடக்கு, தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் ஓட்டு சேகரித்தார். கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் நேற்று நடந்த ஈஸ்டர் பண்டிகையில் பங்கேற்ற அவருக்கு பங்குத்தந்தைகள், ஆலய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

விருத்தாசலம் : கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில், பிரேமலதா ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினார்.

விருத்தாசலம் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா, வடக்கு, தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் ஓட்டு சேகரித்தார். கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் நேற்று நடந்த ஈஸ்டர் பண்டிகையில் பங்கேற்ற அவருக்கு பங்குத்தந்தைகள், ஆலய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்கு கேக் வெட்டி, ஈஸ்டர் பெருநாளை கொண்டாடினார் பிரேமலதா.பின், விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். அரசு மகளிர் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவங்க முயற்சி எடுப்பேன்.

2006ல் விஜயகாந்த் வெற்றி பெற்றபோது, தொகுதி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பெண்களுக்கு தையல் பயிற்சி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்தார். அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடரும்.விஜயகாந்துக்கு கொடுத்த வெற்றியை மீண்டும் வழங்கி, தே.மு.தி.க., வெற்றி பெற கொட்டும் முரசு சின்னத்தில் ஓட்டுபோடுங்கள் என, பிரேமலதா கேட்டுக் கொண்டார்.தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயக்குமார், மாநில மாணவரணி செயலாளர் கிறிஸ்துராஜ், ஒன்றிய பொருளாளர் பூமாலை, நகர நிர்வாகி சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X