அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : இது ஆட்சி மற்றத்திற்கான தேர்தல் அல்ல, அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் என தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் பேசினார். விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் நேற்று மாலை கூட்டணி கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரை ஊர்வலமாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசுகையில், தமிழகத்தில்

விழுப்புரம் : இது ஆட்சி மற்றத்திற்கான தேர்தல் அல்ல, அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் என தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் பேசினார்.

விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் நேற்று மாலை கூட்டணி கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரை ஊர்வலமாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல், ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இது அரசியல் மாற்றத்திற்கான தேர்தல். இத்தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அடிமை ஆட்சியை விரட்டிவிட்டு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.அ.தி.மு.க., அரசு நீட், வேளாண் சட்டங்களை எதிர்க்காமல் அனுமதித்துள்ளது.

தற்போது, கொள்ளைக்காரர்களுக்கும், கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்கும் நடக்கும் தேர்தல். தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்றார்.அப்போது, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் சோமு, வி.சி., பொதுச்செயலாளர் ரவிக்குமார், அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, காங்., மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், நகர தலைவர் செல்வராஜ், மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, த.வா.க., மாவட்ட செயலாளர் குமரன், த.மு.மு.க., மாவட்ட தலைவர் முஸ்தாக் தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X