அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார், : தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வரானவுடன் திருக்கோவிலுார் தொகுதியின் அனைத்து அடிப்படை பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும் என பொன்முடி கூறினார். இதுகுறித்து திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பொன்முடி கூறியதாவது: திருக்கோவிலுார் தொகுதியில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை முழுமையாக கிடைக்கவும், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி

திருக்கோவிலுார், : தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வரானவுடன் திருக்கோவிலுார் தொகுதியின் அனைத்து அடிப்படை பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும் என பொன்முடி கூறினார்.

இதுகுறித்து திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பொன்முடி கூறியதாவது: திருக்கோவிலுார் தொகுதியில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை முழுமையாக கிடைக்கவும், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ள அனைத்து பகுதி வாய்க்கால்கள் சீரமைக்கப்படும். செஞ்சி உள்ளிட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பல கிராமங்கள் பயன் பெற்று வருகிறது. எனினும் ஆற்றின் அருகிலிருக்கும் கிராமங்களுக்கு இத்திட்டம் விஸ்தரிக்கப்படும்.

திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வரவும், நகராட்சியாக தரம் உயர்த்தி, பாதாள சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகா பிரிக்கப்பட்டதை தவிர அதற்கான அடிப்படை கட்டமைப்புகளான நீதிமன்றம், கருவூலம், மருத்துவமனை என அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தவில்லை.முகையூர், மணம்பூண்டி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலை சீரமைக்கப்படும். அதேபோல் திருக்கோவிலுாரில் இருந்து சென்னை செல்ல வசதியாக நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே சர்வீஸ் சாலை அமைக்கப்படும்.அதேபோல் தொகுதியில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் மற்றும் வீரபாண்டியில் சிலர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளும் வாபஸ் பெறுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் தொகுதி மக்களின் இந்த பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.இவ்வாறு பொன்முடி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X