பொது செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனக்கூறி திட்டக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டுசேகரித்தார். திட்டக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேசன், திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் மற்றும் கழுதுார், அரியநாச்சி பகுதியில் கூட்டணி கட்சியினருடன் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், தி.மு.க.,

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனக்கூறி திட்டக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டுசேகரித்தார்.

திட்டக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேசன், திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் மற்றும் கழுதுார், அரியநாச்சி பகுதியில் கூட்டணி கட்சியினருடன் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், தி.மு.க., ஆட்சி அமைந்ததும் திட்டக்குடி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும்' என்றார்.

தி.மு.க., திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, மங்களூர் ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சுரேஷ், அவைத்தலைவர் தங்கமணி, காங்., மாநில செயலாளர் அன்பரசு, வி.சி., மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ், நகர செயலாளர் கவுதமன், த.வா.க., ஒன்றியசெயலாளர் சுரேந்தர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X