அரசியல் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி நகராட்சியாக தரம் உயர புகழேந்தியை வெற்றி பெறச் செய்யுங்கள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியை ,நகராட்சியாக தரம் உயர்த்திட தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியை வெற்றி பெறச் செய்யுங்கள் என இறுதிகட்ட பிரசாரத்தில் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் பேசினார். விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி தனது இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவரை ஆதரித்து, காங்., மாநில செயல் தலைவரான விஷ்ணு பிரசாத் எம்.பி.,

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியை ,நகராட்சியாக தரம் உயர்த்திட தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியை வெற்றி பெறச் செய்யுங்கள் என இறுதிகட்ட பிரசாரத்தில் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் பேசினார்.

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி தனது இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவரை ஆதரித்து, காங்., மாநில செயல் தலைவரான விஷ்ணு பிரசாத் எம்.பி., பேசியதாவது:விக்கிரவாண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தினால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்திடலாம். நகரம் மேலும் வளர்ச்சியடையும். 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்தவர்கள் இது பற்றி சிந்திக்க வில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், விக்கிரவாண்டியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு வேட்பாளர் புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இறுதிகட்ட பிரசாரத்தில், மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், நகர தலைவர் குமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பாபு கோவிந்தராஜ் , மா.கம்யூ., கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமரன், இ.கம்யூ., பாலசுப்ரமணியன், வி.சி.க., ஒன்றிய செயலாளர் வெற்றி வேந்தன், தி.மு.க., மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, மும்மூர்த்தி, ராஜா, முருகன், நகர செயலாளர் நைனாமுகமது, முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார்பாபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபுஜீவானந்தம், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X