அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி மேன்மேலும் வளர பாடுபடுவேன் இறுதி கட்ட பிரசாரத்தில் அமைச்சர் சம்பத் உறுதி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார் : 'நான் வெற்றி பெற்றால் கடலுார் தொகுதி மேன்மேலும் வளர பாடுபடுவேன்' என அமைச்சர் சம்பத் பேசினார். கடலுாரில் அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சம்பத் இறுதி கட்ட பிரசாரத்தை நேற்று மாலை தேரடித்தெருவில் முடித்தார்.அப்போது அவர் பேசியதாவது;அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க., வை பொருத்தவரை வரலாற்றை பதிவு செய்கின்ற

கடலுார் : 'நான் வெற்றி பெற்றால் கடலுார் தொகுதி மேன்மேலும் வளர பாடுபடுவேன்' என அமைச்சர் சம்பத் பேசினார்.

கடலுாரில் அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சம்பத் இறுதி கட்ட பிரசாரத்தை நேற்று மாலை தேரடித்தெருவில் முடித்தார்.அப்போது அவர் பேசியதாவது;அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க., வை பொருத்தவரை வரலாற்றை பதிவு செய்கின்ற இயக்கம். இந்திய துணை கண்டத்தில் தமிழகம் தலைசிறந்து விளங்க வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படுகிற முதல்வர் யார் என கேட்டால் எடப்பாடியார் தான் என சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஜெ.,விற்கு, பிறகு முழுமையாக ஆட்சி செய்து அனைத்து துறைகளிலும் தேசிய விருது பெற பாடுபட்டவர். தொழில் முதலீட்டு மாநாடு நடத்தப்பட்டது. உலகத்தில் உள்ள 21 நாடுகளுக்கு சென்று வந்து 3 லட்சத்து 3 ஆயிரத்து 364 கோடி முதலீடுகளை பெறப்பட்டுள்ளது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற பொதுத்தேர்த்தல் நடைபெற உள்ளது. யார் வெற்றி பெற்றால் நன்மை, யார் வெற்றி பெற்றால் நன்மையில்லை என, நீங்கள் அலசி பார்க்க வேண்டும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியோடு எனக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

என்றைக்கும் உங்களை நேசிப்பவன் நான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். உங்களுடய வாழ்வாதாரம் உயர வேண்டும். உங்களுடைய பொருளாதார வளர்ச்சியில் முன் நிற்பேன். இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X