கடலுார் : 'மக்களின் அன்பால் எனது வெற்றி உறுதியாகியுள்ளது' என, கடலுார் தி.மு.க., வேட்பாளர் அய்யப்பன் பேசினார்.
கடலுார் தி.மு.க., வேட்பாளர் அய்யப்பன் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கி லாரன்ஸ் ரோடு நான்குமுனை சந்திப்பு, பிள்ளையார் கோவில் முன்பு நிறைவு செய்தார்.அவர் பேசியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடலுார் தொகுதியில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தும் அமைச்சர் சம்பத் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.தொகுதி வளர்ச்சியடையாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தின் நாளைய முதல்வராக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வர வேண்டும். தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஒன்று திரண்டு ஒற்றுமையாக எனக்கு தேர்தல் பணியாற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாரத்தின் போது சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. அமைச்சர் சம்பத்துக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நான், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, ஒவ்வொரு குடும்பத்திலும் பழகி மக்களின் அன்பை பெற்றுள்ளேன். இந்த அன்பால் எனது வெற்றி உறுதியாகியுள்ளது. கடலுார் வளர்ச்சியடைய என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார். தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE