சிறு பாலம் கட்டவில்லை :உருக்குலையும் தார் ரோடு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள குமாரபாளையம் செல்லும் ரோட்டின் குறுக்கே, மழை தண்ணீர் வழிந்து சென்றதால், ரோடு உருக்குலைந்துள்ளது.சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் ரோட்டின் குறுக்கே, கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, தண்ணீர் வழிந்து சென்றது. இதற்கு சிறுபாலம் அமைக்கப்படாமல் இருந்ததால், தண்ணீர் ரோட்டின் வழியாக கடந்து சென்று, தார்ரோட்டை ஜல்லிரோடாக
 சிறு பாலம் கட்டவில்லை :உருக்குலையும் தார் ரோடு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள குமாரபாளையம் செல்லும் ரோட்டின் குறுக்கே, மழை தண்ணீர் வழிந்து சென்றதால், ரோடு உருக்குலைந்துள்ளது.சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் ரோட்டின் குறுக்கே, கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, தண்ணீர் வழிந்து சென்றது. இதற்கு சிறுபாலம் அமைக்கப்படாமல் இருந்ததால், தண்ணீர் ரோட்டின் வழியாக கடந்து சென்று, தார்ரோட்டை ஜல்லிரோடாக மாற்றிவிட்டது.இவ்வழியாக வரும் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. மழை பெய்யும் காலங்களில், கல்லுக்குழி மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மழை தண்ணீர் செல்வதற்கு வசதியாக ரோட்டின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டும். அதன்பின், தார் ரோடு புதுபித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.இதற்கு, ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X