சமுதாய கூடத்தை பாதுகாக்க சுற்று சுவர் கட்ட வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமுதாய கூடத்தை பாதுகாக்க சுற்று சுவர் கட்ட வலியுறுத்தல்

Added : ஏப் 04, 2021
Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சவுந்தர்யா கார்டன் வீட்டு மனையிடத்தில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.சமுதாய நலக்கூடத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி, விேசஷங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை ஒட்டி, கிழக்கு பகுதியில், மூன்று கழிப்பிடம் கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தது.இதனை சுற்றி, சுற்று சுவர் கட்டப்படாததால், இரவு நேரங்களில்
 சமுதாய கூடத்தை பாதுகாக்க சுற்று சுவர் கட்ட வலியுறுத்தல்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சவுந்தர்யா கார்டன் வீட்டு மனையிடத்தில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.சமுதாய நலக்கூடத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி, விேசஷங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை ஒட்டி, கிழக்கு பகுதியில், மூன்று கழிப்பிடம் கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தது.இதனை சுற்றி, சுற்று சுவர் கட்டப்படாததால், இரவு நேரங்களில் கழிப்பிடத்தின் கதவுகளை சமூக விரோதிகள் உடைத்து நாசம் செய்துள்ளனர். இதனால், கழிப்பிடங்களை பயன்படுத்த முடியாமல் உள்ளது. இங்கு நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், கழிப்பிடத்தை சீரமைத்து, சுற்று சுவர் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X