அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப் பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் வேன் டிரைவர்கள் திடீர் தர்ணா

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் வேன் டிரைவர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 318 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்கள் எடுத்து செல்ல 23 வேன்கள்

காட்டுமன்னார்கோவில் : ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் வேன் டிரைவர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 318 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்கள் எடுத்து செல்ல 23 வேன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேன்கள் நேற்று மதியம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வரிசையாக நிறுத்தி, ஆய்வு செய்யப்பட்டது. பின், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேனை எங்கும் எடுத்து செல்லக் கூடாது.

இங்கே நிறுத்தி வைக்க வேண்டும் என, தெரிவித்தனர். அதற்கு வேன் டிரைவர்கள் எங்களுக்கு உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு 500 வீதம் மூன்று நாட்களுக்கு 1,500 ரூபாய் முன்னதாகவே வழங்கினால் தான் வேனை இயக்குவோம் என கூறி, திடீர் தர்ணாவில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் லுார்துசாமி, தாசில்தார் ராமதாஸ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, உணவு படி முன்னதாக வழங்கப்படும் என, உறுதியளித்ததை ஏற்று, போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X