தமிழ்நாடு

தயார்! தேர்தலை அமைதியாக நடத்திட மாவட்ட நிர்வாகம்...ஓட்டுப்பதிவு பணிக்கு 17,604 அலுவலர்கள் நியமனம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்திட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளது.தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நாளை 6ம் தேதி நடைபெறும், என கடந்த பிப்., 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. மார்ச் 20ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 22ம் தேதி

நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்திட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளது.தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நாளை 6ம் தேதி நடைபெறும், என கடந்த பிப்., 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. மார்ச் 20ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி தொகுதியில் 13 பேர், திண்டிவனம் (தனி) 15 பேர், வானுார் (தனி) 7 பேர், விழுப்புரம் 25 பேர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலுார், மயிலம் தொகுதிகளில் தலா 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.விழுப்புரம் தொகுதியில் அதிகபட்சமாக 25 பேரும், வானுாரில் குறைந்தபட்சமாக 7 பேரும் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 2,368 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுத்திட, தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் ஏழு தொகுதிகளுக்கும் 21 பறக்கும் படை மற்றும் 7 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் 3,288 பேலட் யூனிட், 2,844 கன்ட்ரோல் யூனிட், 3,179 வி.வி.,பேடு ஆகியவை ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது.இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே அந்தந்த தொகுதி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, கடந்த வாரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஓட்டுப்பதிவு தினத்தன்று, மாவட்டத்தில் உள்ள 2,368 ஓட்டுச்சாவடிகளில் 1,957 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 11,368 ஓட்டுப்பதிவு அலுவலர்கள், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க 101 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஏழு சட்டசபை தொகுதிகள் 176 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தலா ஒரு மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோன்று, தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல் துறை சார்பில் 4,002 பேர் ஈடுபடுகின்றனர்.

ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜோஸ் தங்கையா, தேவநாதன், கோவிந்தராஜ் மற்றும் 36 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் 303 பேர், 585 துணை ராணுவத்தினர், 35 தமிழக சிறப்பு போலீசார் என போலீசார் மட்டும் 2,206 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.இதை தவிர்த்து காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்காவல் படை வீரர்கள் என 1,260 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இவர்களுக்கு, நேற்று விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கீடு செய்து, அனுப்பினர்.நாளை சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X