சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கூட்டணி கட்சியினருடன் காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதிகளில் நடந்தே சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது காட்டுமன்னார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் எம்ஜிஆர் தாசன், சவுதி அரேபியா அம்மா பேரவை தலைவர் அன்பழகன், கூட்டுறவு வங்கி சங்க தலைவர்கள் அறிவுக்கரசன், பாலசந்தர், ஜான்போஸ்கோ, தோத்தாத்திரி, ராஜசேகர், சங்கர், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் அசோகன், வந்தகுமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் சங்கர் பிரம்மதீஸ்வரன், பழனிச்சாமி, பாக்யராஜ், கவாஸ்கர், கிருபாகரன், கார்த்தி, பெருமாள், பா.ம.க., பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ், தவசீலன், பசுமை அன்பு செழியன், கலைகுமார், சத்தியமூர்த்தி, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் மாவட்ட துணை தலைவர் விவேகானந்தன், த.மா.கா., நகர செயலாளர் ஜோதிமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு நகர வீதிகளில் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE