எல்லை தாண்டும் கனிமவளம்: அதிகாரிகள் ஆசியில் அத்துமீறல்| Dinamalar

எல்லை தாண்டும் கனிமவளம்: அதிகாரிகள் ஆசியில் அத்துமீறல்

Added : ஏப் 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, ஜல்லிக்கற்கள், சக்கை கற்கள், சைஸ் கற்கள், எம் சாண்ட் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, ஆற்று மணல் எடுக்க தடை உள்ளதால், எம் சாண்ட் மட்டுமே கட்டுமான பணிக்கு கைகொடுக்கிறது.இந்த பொருட்கள், அண்டை மாநிலமான கேரளாவுக்கு, கிராம வழித்தடங்கள் வழியாக டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, ஜல்லிக்கற்கள், சக்கை கற்கள், சைஸ் கற்கள், எம் சாண்ட் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, ஆற்று மணல் எடுக்க தடை உள்ளதால், எம் சாண்ட் மட்டுமே கட்டுமான பணிக்கு கைகொடுக்கிறது.
இந்த பொருட்கள், அண்டை மாநிலமான கேரளாவுக்கு, கிராம வழித்தடங்கள் வழியாக டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளது. இரவு, பகலாக ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில், தமிழக கனிம வளங்கள் கேரளாவுக்கு பறக்கின்றன. தற்போது, அரசு அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கும் நிலையில், அதிகளவில் கனிமவளம் கொண்டு செல்லப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது என, புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், ''பெரும்பாலான கல் குவாரிகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பினாமிகளால் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு, நிலைமை எப்படி இருக்கும் எனத்தெரியாது என்பதால், தேர்தலுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கனிம வளங்களை வெட்டியெடுத்து, கேரளாவுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கின்றனர். ஆளுங்கட்சி பின்னணி இருப்பதால், அதிகாரிகள் ஆசியுடன் கனிம வளம் கடத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X