பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டுக்கு ஒரு முறை உயிர் நீர் தேவை: வாக்குறுதி தரும் வேட்பாளருக்கு ஓட்டு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதியில், வறட்சியில் வாடும் நிலங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது உயிர் நீர் கொடுக்க, உறுதி அளிக்கும் வேட்பாளருக்கு ஓட்டுப்போட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின், சேர்வகாரன்பாளையம், புரவிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் சூலக்கல், எஸ்.மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மொத்தமாக, 22

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதியில், வறட்சியில் வாடும் நிலங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது உயிர் நீர் கொடுக்க, உறுதி அளிக்கும் வேட்பாளருக்கு ஓட்டுப்போட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின், சேர்வகாரன்பாளையம், புரவிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் சூலக்கல், எஸ்.மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மொத்தமாக, 22 கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களில், கடும் வறட்சி நிலவுகிறது. பி.ஏ.பி., திட்டத்தில் இப்பகுதியில் கால்வாய் அமைக்காத காரணத்தால், வயல்வெளிகள் அனைத்தும், மானாவாரி நிலமாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின்போதும், மண் வளம் மிக்க இப்பகுதிக்கு, பி.ஏ.பி., திட்டத்தில் கால்வாய் அமைத்து, பாசனம் கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.வேட்பாளர்களும் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதி அளிக்கின்றனர். கடந்த தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பிறகும், வடக்கிபாளையத்தில், ஒட்டுமொத்த மேற்கு பகுதி விவசாயிகள் கால்வாய் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆனாலும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.சேர்வகாரன்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர், ஞானஜனார்த்தனம் கூறியதாவது:வெற்றி பெற்றதும் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என, வாக்குறுதி அளித்ததை நம்பி, ஓட்டளித்து பலமுறை ஏமாந்து விட்டோம். ஆண்டுதோறும் கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயிலால், கால்நடைகள் குடிக்கக்கூட நீர் இல்லாமல் பாதிக்கின்றன.இதை தவிர்க்க, எஸ்.மேட்டுப்பாளையம் வரை, அமைக்கப்பட்ட பி.ஏ.பி., கிளை கால்வாய் வழியாக, மேற்கு நோக்கி கால்வாய் அமைத்து, ஆண்டுக்கு ஒருமுறை உயிர் நீராவது கொடுக்க வேண்டும். இதை உறுதி செய்யும் வேட்பாளருக்கு, இம்முறை ஓட்டுப்போடுவது என, முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X