சேத்தியாத்தோப்பு : புவனகிரி எம்.ஜி.ஆர்., சிலை அருகில் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் பங்கேற்ற பிரசாரம் நிறைவு கூட்டம் நடந்தது.
வழக்கறிஞர் முருகுமணி, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட இணை செயலாளர் செஞ்சிலட்சுமி இளங்கோவன், ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், பா.ம.க., தேவதாஸ்படையாண்டவர், த.மா.கா., கலைவாணன், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் செல்வக்குமார், அவைத் தலைவர் தங்கமகாலிங்கம் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் நெத்தியடிநாயகன், தில்லைக்கோபி பேசினர்.வேட்பாளர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கி, பேசுகையில், 'மறைந்த முதல்வர் ஜெ., ஆட்சி காலத்திலிருந்து 10 ஆண்டுகளாக மின்வெட்டில்லா மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. முதல்வர் பழனிசாமி பொது மக்கள், விவசாயிகள், மகளிர் குழுக்கள், மாணவர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ரூ.1,500, 6 சிலிண்டர், சோலார் அடுப்பு, வாஷிங் மிஷின் திட்டங்கள் நிறைவேற என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்' என்றார். அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., மூ.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE