ஐயா, சீக்கரம் ரோடு போடுங்க! குடியிருப்பு பகுதிகளில் அதிருப்தி| Dinamalar

ஐயா, சீக்கரம் ரோடு போடுங்க! குடியிருப்பு பகுதிகளில் அதிருப்தி

Added : ஏப் 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், ரோடு சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட நகராட்சி குடியிருப்பு பகுதி ரோடுகள் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதில், நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியான
 ஐயா, சீக்கரம் ரோடு போடுங்க! குடியிருப்பு பகுதிகளில் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், ரோடு சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட நகராட்சி குடியிருப்பு பகுதி ரோடுகள் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதில், நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மகாலிங்கபுரத்திலுள்ள ரோடுகள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பணிகள் துவங்கி வாரக்கணக்கில் ஆகியும், இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. பல வீதிகளில், கற்களை பரப்பி, அப்படியே விட்டுள்ளனர். அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.மக்கள் கூறுகையில், 'தேர்தல் நேரம் என்பதால், சில பகுதிகளில், ஒரு நாளில் ரோடு அமைத்தனர், என செய்திகள் வருகின்றன. ஆனால், பொள்ளாச்சியில் இரு வாரங்களாகியும் ஆமை வேகத்தில் ரோடு பணி நடப்பதால், மக்கள் சிரமத்துக்குள்ளாக்குகின்றனர்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X