விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்ல 176 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, திண்டிவனம், மயிலம், வானுார், செஞ்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 2,368 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்வதற்கு, 176 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டது. பின், ஓட்டுச்சாவடி மையங்கள் ஒதுக்கீடு செய்து, வாகனங்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்து, இன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றிச்செல்லப்படுகின்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE