பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.6.58 கோடிக்கு மது விற்பனை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தேர்தல் விடுமுறையையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6.58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 124, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 104 என மொத்தம் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் தேர்தல் ஆணைய உத்தரவின்படி நேற்று முதல் நாளை 6ம் தேதிவரை மூடப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்று தினங்கள்

விழுப்புரம் : தேர்தல் விடுமுறையையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6.58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 124, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 104 என மொத்தம் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் தேர்தல் ஆணைய உத்தரவின்படி நேற்று முதல் நாளை 6ம் தேதிவரை மூடப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்று தினங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி, நேற்று முன்தினம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுபானங்கள் 7,759 அட்டை பெட்டிகளும், பீர் வகைகள், 5,346 அட்டை பெட்டிகள் விற்பனையாகியது. இதன் மொத்த மதிப்பு 6 கோடியே 58 லட்சத்து 21 ஆயிரத்து 110 ரூபாயாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X