அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்கல் பாலிடிக்ஸ்: காங்., கட்சியினர் தீவிரம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தி.மு.க.,வினர் உற்சாகம்பொள்ளாச்சி தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க., வேட்பாளரின் பிரசாரத்தில், தவறாமல் பங்கேற்றது, தி.மு.க.,வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், காங்., நகர தலைவர் அ.தி.மு.க.,வுக்கு தாவினார். இதையடுத்து, மூன்று பேர் நகரத்துக்கு புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களும், மகளிர் காங்., நிர்வாகிகளும், கூட்டணி வேட்பாளர்

தி.மு.க.,வினர் உற்சாகம்பொள்ளாச்சி தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க., வேட்பாளரின் பிரசாரத்தில், தவறாமல் பங்கேற்றது, தி.மு.க.,வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், காங்., நகர தலைவர் அ.தி.மு.க.,வுக்கு தாவினார். இதையடுத்து, மூன்று பேர் நகரத்துக்கு புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களும், மகளிர் காங்., நிர்வாகிகளும், கூட்டணி வேட்பாளர் வரதராஜனின் அன்றாட பிரசார பயணத்தில் தவறாமல் பங்கேற்றனர்.பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதைப் பார்க்கும் தி.மு.க.,வினர், 'காங்கிரஸ் காரங்களா இப்படி வரிந்து கட்டி தேர்தல் பிரசாரம் செய்யறாங்க,' என, வியப்படைந்தனர்.ஓட்டுக்கு நோட்டு கொடுத்துஇரு கட்சிகளும் அமர்க்களம்பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் ஜெயராமன், தி,மு.க., வேட்பாளர் வரதராஜன் ஆகியோர் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்த நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது சப்தமில்லாமல், நடந்தது.
அ.தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 1,000 ரூபாயும், தி.மு.க.,சார்பில், 500 ரூபாயும் வினியோகித்துள்ளதாக, கட்சியினர் தெரிவித்தனர்.ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, இரு கட்சியினரும் போட்டுக்கொடுக்காமல், உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டது போல, நடந்து கொண்டனர். வாக்காளர்களும் இரு கட்சியினரும் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டு, அமைதியாக இருந்தனர்.இரு கட்சியிலும், குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட வாக்காளர்களை தேர்வு செய்து பணம் வினியோகம் செய்துள்ளனர்.தேர்தல் வரைக்கும் தாராளம்அதுக்கப்புறம் என்னாகுமோபொள்ளாச்சி கிராமங்களில் தேர்தல் முடியும் வரை, மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையோ, மின்தடையே ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக, 24 மணி நேரமும் வேலை செய்தாலும் சரி என சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.அதே போல், மிக தாராளமாக குடிநீர் வினியோகமும், தடையற்ற மின்சாரமும் வினியோகிக்கப்படுகிறது. 'வேலைப் பளு' என்று காரணம் கூறி, கண்ணில் படாமல் பதுங்கிக் கொள்ளும் மின்வாரிய ஊழியர்கள், வாட்டர் மேன்கள் கிராமங்களையே சுற்றிச் சுற்றி வந்து, மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.'இதெல்லாம் சரி தான்... இந்த கரிசனம் தேர்தல் முடிந்த பிறகும் தொடருமா,' என, விபரம் தெரிந்தவர்கள் கேட்டால், அதிகாரிகளிடம் மவுனம் தான் பதிலாக வருகிறதாம்.ஒன்னுமே பிடிக்கலையா?உள்ளூர் அதிகாரிகள் 'அப்செட்'உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், தொகுதிக்கு, தலா, 9 பறக்கும் படை, 2 வீடியோ கண்காணிப்புக்குழு, 2 செலவின கண்காணிப்புக்குழு என அமைக்கப்பட்டும் பயனில்லை. கடந்த, 15 நாட்களாக பெரிய அளவில் எந்த விதமான பணம், பரிசுப்பொருட்கள் சிக்கவில்லை.
இந்நிலையில், தேர்தலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் பணம், பரிசு பொருட்கள் வினியோகம் அமோகமாக நடந்து வருகிறது. இதனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளை, உயர் அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டிற்கு வராமல், வழக்கமான அதிகாரிகளாகவே உள்ளீர்கள் என, எச்சரித்துள்ளனர். இதனால், உள்ளூர் அதிகாரிகள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.
இரு நாளும் திண்ணை பிரசாரம்கடைசி அஸ்திரமும் பாய்ந்ததுபொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் எப்படி பிரசாரம் செய்ய வேண்டும், என்னென்ன பேச வேண்டும் என, தி.மு.க., தலைமை பல வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளது. கட்சிக்குள் நிலவிய புகைச்சலை அடக்கிய பின், இந்த தேர்தலில் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என, நிர்வாகிகளுக்கு தலைமை கட்டளையிட்டுள்ளது.
ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும், தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பூத் கமிட்டியினர் விலை போய் விடக்கூடாது. பிரசாரம் ஓய்ந்த நிலையில், இரு நாட்களும் மக்களை வீடு வீடாக சந்தித்து திண்ணைப்பிரசாரம் செய்ய வேண்டும். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளோர் ஓட்டை முழுமையாக அறுவடை செய்ய வேண்டும், என, பல கட்டளைகளை பிறப்பித்துள்ளதாம்.சரக்கு பதுக்கல் அமோகம் அதிகாரிகள் 'லெப்ட்-ரைட்'தேர்தலுக்கு, இரு நாட்கள், ஓட்டு எண்ணிக்கை நாள் என, மூன்று நாட்கள் 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள அனைத்து 'டாஸ்மாக்' மதுக்கடைகளிலும், இரு நாட்களில் விற்பனை அதிகரித்து, வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் சட்ட விரோத மது விற்பனைக்காக மது பதுக்கல் அதிகரித்துள்ளது. புதுச்சேரி சரக்கும் உள்ளே உலாவி வருகிறது. அபரிமிதமான விற்பனை, பதுக்கல் அதிகரித்துள்ள நிலையில், உயர் அதிகாரிகள், 'லெப்ட்-ரைட்' வாங்கியுள்ளனர். உள்ளூர் போலீசாருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சரை மறந்தது ஏனோ?குழப்பத்தில் தி.மு.க.,வினர்உடுமலை அருகேயுள்ள முக்கோணத்தில், வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார்.அப்போது, மடத்துக்குளம் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் எம்.பி.,யை, 'ரியல் எஸ்டேட் புரோக்கர்' என கூறினார். ஆனால், உடுமலை தொகுதியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறித்து கண்டு கொள்ளவில்லை.
துண்டுச்சீட்டு எழுதிக் கொடுத்தும், உடுமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பற்றி உதயநிதி வாய் திறக்காத மர்மம் புரியாமல் தி.மு.க.,வினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்கட்சியினருக்கு 'அட்வைஸ்'பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமன், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே, களப்பணியை துவங்கி விட்டார். நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், தேர்தலின் உயிர்நாடியான, பூத் கமிட்டியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தொகுதியில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு, ஒவ்வொருவரும் சிறப்பாக களப்பணி செய்துள்ளீர்கள். ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை, இரு நாட்களும், வாக்காளர்களை சந்தித்து ஈர்க்க வேண்டும். தேர்தல் அன்று, ஒரு ஓட்டு கூட தவற விடக்கூடாது. ஓட்டுப்பதிவுக்கு வராதவர்களை அறிந்து, அவர்களை அணுகி, ஓட்டுப்போடுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும், என, அறிவுறுத்தியுள்ளார்.
ரூ.10 ஆயிரம் பெரிய தொகையா?மாஜி அமைச்சர் செம கடுப்புஉடுமலை ராகல்பாவி பிரிவு பகுதியில், அதிக அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், டி.எஸ்.பி., என பெரும்படையுடன் அதிகாரிகள் சென்று சோதனை செய்தனர்.பைக்கில், 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தவர் சிக்கியுள்ளார். மடத்துக்குளம் அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு, அங்கு வந்து, தேர்தல் கமிஷன் விதிகளை கூறியும், ஆளும்கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரியாதா என, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யாமல் அனுப்பி வைத்தனர்.கொடுத்ததை பதுக்கினார்களோ!கட்சிக்குள் துவங்கியது களேபரம்வால்பாறை தொகுதி முழுவதிலும், அ.தி.மு.க.,வினர், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை துவங்கியுள்ளனர். கோட்டூர், ஆனைமலை உள்பட பல பகுதிகளில் பொறுப்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.
சில பொறுப்பாளர்கள் கட்சி மேலிடம் ஒதுக்கிய பணத்தை, 'பொறுப்பாக' சுருட்டிக்கொண்டு ஓட்டுக்கு, 200 முதல் 300 ரூபாய் மட்டுமே வழங்கி வருகின்றனர். அதேசமயம் தி.மு.க.,வினர் இன்னமும் பணம் பட்டுவாடா துவங்காமல் உள்ளனர்.இதனால், கட்சி மேலிடம் ஒதுக்கிய பணத்தை பொறுப்பாளர்கள் சுருட்டிக்கொண்டனர் என, தி.மு.க., மேலிடத்துக்கு கட்சி தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X