பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: ஓட்டுப்போட்டு எண்ணிய அதிகாரிகள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
உடுமலை:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் உறுதித்தன்மையை சரிபார்க்கும் வகையில், 5 சதவீத இயந்திரங்களில், தலா, 1000 ஓட்டுப்பதிவு செய்து, எண்ணி சரிபார்க்கப்பட்டது.உடுமலை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 380 ஓட்டுச்சாவடிகளுக்கு, 456 கட்டுப்பாட்டுக் கருவிகள், 456 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தோம் என வாக்காளர்கள் அறிந்து கொள்ளும், 494 'விவிபேட்'

உடுமலை:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் உறுதித்தன்மையை சரிபார்க்கும் வகையில், 5 சதவீத இயந்திரங்களில், தலா, 1000 ஓட்டுப்பதிவு செய்து, எண்ணி சரிபார்க்கப்பட்டது.உடுமலை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 380 ஓட்டுச்சாவடிகளுக்கு, 456 கட்டுப்பாட்டுக் கருவிகள், 456 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தோம் என வாக்காளர்கள் அறிந்து கொள்ளும், 494 'விவிபேட்' இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 357 ஓட்டுச்சாவடிகளுக்கு, 429 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 429 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும், 465 'விவிபேட்' மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளது.இரு தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி மற்றும் 'விவிபேட்' இயந்திரத்தில், எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்தோம் என்று அறிந்து கொள்ளும் வகையில், சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்தது.முதல் கட்டமாக, மண்டல தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் ஆகியோர், 'கன்ட்ரோல்' யூனிட்டுடன், 'விவி பேட்' மற்றும் 'பேலட் யூனிட்'டுகளை இணைத்தனர்.பேட்டரி பொருத்தி, இயந்திரங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். முன்னதாக, 'பேலட் யூனிட்'டில், 'பிங்க்' நிறத்தில் அச்சாகி வந்திருந்த, 'பேலட் ஷீட்' களை பொருத்தி, சீல் வைத்தனர்.'பேலட் ஷீட்'டில், 'படிவம் - 7 ஏ' வில் இருந்தது போல், வாக்காளர் பெயர், போட்டோ மற்றும் சின்னம் இடம்பெற்றிருந்தது. இயந்திரம் தயாரானதும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், 'நோட்டோ' உட்பட அனைத்து பட்டன்களையும் அழுத்தி, ஓட்டளித்து பார்க்கப்பட்டது.அவை, 'கன்ட்ரோல் யூனிட்'டில் முறையாக பதிவாகியது உறுதி செய்யப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு தொகுதியிலும், 5 சதவீத இயந்திரங்களை தேர்வு செய்து, தலா, 1000 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. அனைத்து சின்னங்களிலும் ஓட்டுப்பதிவு செய்து, அவற்றை எண்ணி சரிபார்க்கப்பட்டது. அத்துடன், 'விவி பேட்'டில் சேகரமான, ரசீதுகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X