பொது செய்தி

தமிழ்நாடு

கவனமாக பார்த்து போடுங்கள் ஓட்டு

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், நாளை நடக்க உள்ளது. காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டு போடலாம். வாக்காளர்கள் அனைவரும், யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை அறிந்து, சின்னங்களை கவனமாய் பார்த்து, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்.தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டசபை பொதுத் தேர்தல்,
TN elections 2021, Tamil Nadu elections 2021, TN election, Assembly election

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், நாளை நடக்க உள்ளது. காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டு போடலாம். வாக்காளர்கள் அனைவரும், யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை அறிந்து, சின்னங்களை கவனமாய் பார்த்து, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல், ஒரே கட்டமாக நாளை நடக்க உள்ளது.


ஓட்டுப்பதிவு

நாளை காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது; இரவு, 7:00 மணிக்கு முடிவடைகிறது. இரு மாநிலங்களிலும், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 12ல் துவங்கி, 19ல் நிறைவு அடைந்தது. மார்ச் 22ல், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டது. அதன்பின், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், பிரசாத்தில் ஈடுபட்டனர். மக்களை கவர, கால்களில் விழுந்தனர்.

டீக்கடையில், டீ போடுதல், பரோட்டா போடுதல், பிரியாணி செய்தல், காய்கறி விற்றல், தோசை சுடுதல், துணி துவைத்தல் என, ஓட்டு கேட்கப் போன இடங்களில், அனைத்து பணிகளையும் செய்தனர்.பல இடங்களில், வேட்பாளர்கள் கட்சியினருடன் இணைந்து, குத்தாட்டம் போட்டனர். தேர்தல் பிரசாரம் என்ற பெயரில், அனைத்து விதமான நாடகங்களும் அரங்கேறின.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, பிரசாரத்தில் பேசக் கூடாது என்பது, தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்று.அது குறித்து கவலைப்படாமல், தனிப்பட்ட தாக்குதல்களும் அரங்கேறின. முதல்வரின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசிய, தி.மு.க., - எம்.பி., ராசா, 48 மணி நேரம் பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் தடை விதித்த நிகழ்வையும், இந்த தேர்தலில் முதன் முறையாக தமிழகம் கண்டது.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, அரசியல் கட்சி வேட்பாளர்கள், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பிரசாரம் மேற்கொண்டனர். தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்க்கட்சி வேட்பாளர்களை விமர்சித்தும், ஏராளமான வீடியோ மற்றும் 'மீம்ஸ்'களை உருவாக்கி, உலவ விட்டனர்.


வாக்குறுதி

ஒவ்வொரு தொகுதியிலும், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்து கவலைப்படாமல், நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம், பல வேட்பாளர்கள் வாக்குறுதிகளாக அள்ளி வீசினர். எம்.எல்.ஏ.,வாக தேர்வான பின், மக்களை எட்டி கூட பார்க்காதவர்கள் எல்லாம், 'கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்' என்றனர்.

சிலர், 'இம்முறை எனக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால், என் வாழ்வே சூனியமாகி விடும்' என, கண்ணீர் விட்டனர்.ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விபரம், அவர் மீதுள்ள குற்ற வழக்குகள் போன்ற விபரங்களை, அவர்களின் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் நடத்தை, செயல்பாடுகள், சேவையைப் பற்றி, ஒரு மாத பிரசாரத்தில் மக்கள் அறிந்திருக்க முடியும்.


தகுதியான நபர்

எனவே, தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை அலசி ஆராய்வதுடன், கருத்துக் கணிப்பு மற்றும் சமூக வலைதளங்களில் உலா வந்த தகவல்களை உதறிவிடுங்கள். யார் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கும், மாநிலத்துக்கும் நல்லது என்பதை உணர்ந்து, தகுதியான நபர்களை தேர்வு செய்ய, எந்த சின்னம் என்பதை கவனமாய் பார்த்து, ஒவ்வொருவரும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுச்சாவடியில் பெரிய வரிசை, வெயில் அதிகம் என காரணம் கூறாமல், ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்து, அனைவரும் தவறாமல், நாளை ஓட்டளிக்க வேண்டும்.


தலைவர்கள் பிரசாரம் தொகுதிகளில் நிறைவு!

தமிழகத்தில், ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், நேற்று இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது. முக்கிய தலைவர்கள் எல்லாரும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில், பிரசாரத்தை நிறைவு செய்தனர்.அதன்படி, முதல்வர் பழனிசாமி., தான் போட்டியிடும் இடைப்பாடியிலும்; துணை முதல்வர் பன்னீர்செல்வம்., போடியிலும்; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கொளத்துாரிலும், தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

திருவொற்றியூரில் சீமான்; கோவை தெற்கு தொகுதியில் கமல்; கோவில்பட்டியில் தினகரன், தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

இன்று ஓய்வு; நாளை ஓட்டுப்பதிவு.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஏப்-202123:41:34 IST Report Abuse
மலரின் மகள் பொலிக பொலிக ஜனநாயகம் ஜனநாயக கடமையாற்றும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்னை பராசக்தியின் அருளாசி உங்களுக்கு உண்டாகட்டும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஏப்-202123:21:55 IST Report Abuse
Pugazh V ஓட்டு போட்டவுடன், உங்களிடம் இருக்கும் கார், பைக், குடியிருப்பில் இருக்கும் ஜெனரேட்டர், ஆபீஸ்/ ஒர்க்ஷாப் பில் இருக்கும் ஜெனரேட்டர் - இப்படி எல்லாவற்றிலும் பெட்ரோல்/ டீசல் ஃபுல் டேங்க் அடித்து வைத்து விடவும். 7ஆம் தேதி இதன் விலைகளை பாஜக ஒரு தூக்கு தூக்கி உயர்த்தும்.
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,யுனைடெட் கிங்டம்
05-ஏப்-202118:56:30 IST Report Abuse
Baskar சே ஆலந்தூர் தொகுதி ல ரெண்டு பேர் ஒரே பெயரோடு , எந்த கட்சிக்கு தெரிய மாட்டேங்குது . வேட்பாளர்கள் ஒரே மாதிரி இருந்தா கட்சி பெயரை இணைச்சுக்கலாம்னு , அப்பிடி தேர்தல் கமிஸ்ஸின் சொன்ன நல்ல இருக்கும். மக்களை குழப்பறத்துக்கே ஒரே பேர்ல பல பேரை நிறுத்தி கட்சி கொழப்பறதுன்னா . இதை யாரவது கேஸ் போட்டு தீர்க்கமாட்டாளோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X