பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் கொடி அணிவகுப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்புநடத்தினர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர், ஆவியூர், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் போலீசார் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்,

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்புநடத்தினர்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர், ஆவியூர், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் போலீசார் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அமைதியான வகையில் ஓட்டு பதிவை உறுதி செய்யும் வகையில் பொது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டி.எஸ்.பி., ராஜூ மேற்பார்வையில் கொடி அணிவகுப்பு நடந்தது.

இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் முன்னிலையில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசாரும் இணைந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் தெருக்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் மேற்கொண்டிருக்கும் கொடி அணிவகுப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X