அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோதனையை அரசியல் ஆக்கும் தி.மு.க., பா.ஜ., தேசிய தலைவர் நட்டா புகார்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை:''கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். ஆனால், வருமான வரித்துறை சோதனையை, தி.மு.க., அரசியலாக்குகிறது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். புதுச்சேரியில், காங்கிரசை சேர்ந்த நாராயணசாமி
சோதனையை அரசியல் ஆக்கும் தி.மு.க., பா.ஜ., தேசிய தலைவர் நட்டா புகார்

சென்னை:''கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். ஆனால், வருமான வரித்துறை சோதனையை, தி.மு.க., அரசியலாக்குகிறது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். புதுச்சேரியில், காங்கிரசை சேர்ந்த நாராயணசாமி செய்துள்ள ஊழல்களால், மக்கள் வெறுப்பில் உள்ளனர். அம்மாநிலத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். தமிழகத்தில், பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ள திட்டங்களால், அதிக மக்கள் பயனடைந்துள்ளனர்.

மக்களிடம், மோடிக்கு வரவேற்பு காணப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இதனால், தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது. எம்.ஜி.ஆர்., ஏழை மக்களுக்காக செயல்பட்டது போல, அவரின் வழியை பின்பற்றிய ஜெயலலிதாவும், ஏழை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினார். கள நிலவரம், அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக உள்ளதால், அ.தி.மு.க., கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.

கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். ஆனால், வருமான வரித்துறை சோதனையை, தி.மு.க., அரசியலாக்குகிறது.மத்தியில், காங்., கூட்டணி அரசில், தி.மு.க., அங்கம் வகித்தபோது, ஊழல் செய்வதையும், அதிகாரத்தில் இருப்பதையுமே நோக்கமாக கொண்டிருந்தது.

முருக கடவுளை அவமதித்த கறுப்பர் கூட்டத்தை, ஸ்டாலின் கண்டிக்கவில்லை. தி.மு.க., குடும்ப அரசியலை முன்னெடுக்கிறது. மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும்.இவ்வாறு, நட்டா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
05-ஏப்-202115:35:58 IST Report Abuse
sahayadhas ஹரே ராம் பையா, எப்ப உங்களுக்கு முருகனை தெரியும்.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
05-ஏப்-202115:34:37 IST Report Abuse
Srinivas நட்டா ....உங்க கும்பலுக்கு ஓட்டு நஹி ....சலோ.... சலோ.... டெல்லி சலோ...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
05-ஏப்-202113:40:21 IST Report Abuse
Elango எப்படியோ சாமியார் மோடி அமித்ஷா பிரச்சாரம் செய்ய வந்து ஆதிமுகவிற்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளையும் காலி செய்து விட்டார்கள் (கோவை தெற்கு, தொண்டாமுத்தூர்)..... ரெய்டு ஏவி மிச்சம் இருக்கும் தொகுதிகளையும் காலி செய்து விட்டார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X