பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை குழுவினர் ஆய்வு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : ராமராஜபுரத்தில் பறக்கும்படை அதிகாரிகளை பார்த்ததும், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்த மர்ம நபர்கள் பணத்தை வீசி தப்பி ஓடினர். சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட ராமராஜபுரம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி பறக்கும் படை குழு -2, சத்தியராஜ்

சங்கராபுரம் : ராமராஜபுரத்தில் பறக்கும்படை அதிகாரிகளை பார்த்ததும், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்த மர்ம நபர்கள் பணத்தை வீசி தப்பி ஓடினர்.

சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட ராமராஜபுரம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி பறக்கும் படை குழு -2, சத்தியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ராமராஜபுரம் கிராமத்திற்கு சென்று, சோதனையில் ஈடுபட்டனர்.பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கையில் இருந்த பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் வீசி சென்ற 8 ஆயிரத்து 500 ரூபாய் பணம், சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X