பொது செய்தி

தமிழ்நாடு

விசுவாசமுள்ள மக்கள் வெற்றிபெற செய்வார்கள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : விசுவாசமுள்ள மக்கள் என்னை வெற்றிபெற செய்வார்கள் என்று ரிஷிவந்தியம் அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:ரிஷிவந்தியம் தொகுதியில் அனைத்து ஊர்களிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் எந்த நலத்திட்டப் பணிகளும் நடக்கவில்லை. ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு மற்றும் மலையடி

தியாகதுருகம் : விசுவாசமுள்ள மக்கள் என்னை வெற்றிபெற செய்வார்கள் என்று ரிஷிவந்தியம் அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:ரிஷிவந்தியம் தொகுதியில் அனைத்து ஊர்களிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் எந்த நலத்திட்டப் பணிகளும் நடக்கவில்லை. ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு மற்றும் மலையடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது.எனது தந்தை சிவராஜ் அவரைத் தொடர்ந்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தும் இத்தொகுதியில் மேற்கொண்ட திட்டங்களை மட்டுமே இன்னும் மக்கள் உயர்வாக பேசுகின்றனர்.

மற்றபடி கடந்த 5 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் காணமுடியவில்லை.விஜயகாந்த் மற்றும் என் தந்தை சிவராஜ் மீது விசுவாசமாக மக்கள் உள்ளனர். அவர்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உறுதியோடு உள்ளது.என்னை தேர்ந்தெடுத்தால் 4 மாதத்தில் குடிநீர் பிரச்னையை முற்றிலும் தீர்ப்பேன். நீர்வளம் உள்ள பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். மருத்துவ வசதி, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, பள்ளி தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் தனி கவனம் செலுத்துவேன். விவசாயிகள் நலனில் அக்கறையோடு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்.

நான் பிரசாதத்திற்கு சென்றபோது ஒவ்வொரு ஊரிலும் மகளிர் மற்றும் இளைஞர்கள் மிகுந்த ஆவலோடு என்னை வரவேற்றார்கள். அவர்களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபடுவேன். எனது தந்தை சிவராஜ் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு இத்தொகுதியை அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைய செய்வதே எனது குறிக்கோளாகும். மாற்றத்தை விரும்பும் இளைய தலைமுறைக்கு என்றும் நம்பிக்கையோடு இருப்பேன் என்று பிரபு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X