அரசியல் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் தொகுதியின் வளர்ச்சியே லட்சியம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா, தொகுதியின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் அளித்துள்ள அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்ற உங்களில் ஒருவனாக இருந்து கடுமையாக உழைப்பேன் என தெரிவித்தார். சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது: சங்கராபுரம் தொகுதி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

சங்கராபுரம் : சங்கராபுரம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா, தொகுதியின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் அளித்துள்ள அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்ற உங்களில் ஒருவனாக இருந்து கடுமையாக உழைப்பேன் என தெரிவித்தார்.

சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது: சங்கராபுரம் தொகுதி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. சங்கராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுப்பேன். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பட்டா அளிப்பதுடன், மின்சாரம், சாலை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வேன்.கோமுகி அணையின் நீர் பிடிப்பு பகுதியை உயர்த்துதல், சின்னசேலத்திற்கு செல்லும் கால்வாயினை துார்வாருதல், கச்சிராய பாளையத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வேன்.படித்த இளைஞர்களின் நலனுக்காக வேலைவாய்ப்பு முகாம், ஏழை, எளிய மக்களுக்காக பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துவேன்.

இப்பகுதியில் தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன்.ஏழை குடும்பத்தில் பிறந்து படி படியாக வளர்ந்துள்ளதால், மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன். தொகுதியின் வளர்ச்சியே லட்சியமாக கொண்டு உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்ற, மக்களாகிய நீங்கள் எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு வேட்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X