பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம்மாள் ஓடையை மீட்க சிறப்பு திட்டம்? வாக்குறுதியாகவே தொடர்வதால் கவலை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
உடுமலை:தங்கம்மாள் ஓடையை துார்வாரி, கான்கீரிட் கரைகள் அமைக்கும் திட்டம், வெறும் வாக்குறுதியாகவே, பல ஆண்டுகளாக தொடர்வதால் நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள திருமூர்த்திமலையிலிருந்து மழைக்காலங்களில், வெளியேறும் தண்ணீரை தேக்கி வைத்து, பாசனத்துக்கு பயன்படுத்த, ஏழு குள பாசன திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இறுதியாக இருக்கும்

உடுமலை:தங்கம்மாள் ஓடையை துார்வாரி, கான்கீரிட் கரைகள் அமைக்கும் திட்டம், வெறும் வாக்குறுதியாகவே, பல ஆண்டுகளாக தொடர்வதால் நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள திருமூர்த்திமலையிலிருந்து மழைக்காலங்களில், வெளியேறும் தண்ணீரை தேக்கி வைத்து, பாசனத்துக்கு பயன்படுத்த, ஏழு குள பாசன திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இறுதியாக இருக்கும் ஒட்டுக்குளத்திலிருந்து உபரி நீர், தங்கம்மாள் ஓடை வழியாக உப்பாறு ஓடையில் இணைவதே இப்பாசன திட்ட அமைப்பாகும்.முன்பு, ஆண்டு முழுவதும் தண்ணீர் சென்று வந்த, தங்கம்மாள் ஓடையின் கரையிலேயே உடுமலை நகரம் உருவாகி வளர்ந்தது.நகர வளர்ச்சிக்குப் பிறகு, குடியிருப்புகளின் சாக்கடைக்கழிவு முழுவதும், தங்கம்மாள் ஓடையில் கலக்கத்துவங்கி, தண்ணீர் ஓடிய ஓடை, சாக்கடை கால்வாயாக மாறியது. இதனுடன், ராஜவாய்க்கால் பள்ளமும், கழிவு நீர் சாக்கடையாக மாற்றப்பட்டது.தங்கம்மாள் ஓடையை ஒட்டி, உடுமலை நகராட்சியைச்சேர்ந்த, 5 க்கும் மேற்பட்ட, வார்டுகளுக்குட்பட்ட, நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. கழிவு நீர் கலப்பால், தண்ணீர் செல்வது தடைபட்டு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதும், கொசு உற்பத்தியாவதும் தொடர்கதையாக உள்ளது.
ஓடையின் கரைகள் சரிந்து, மழைக்காலத்தில், ஒட்டுக்குளத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, தண்ணீர் செல்ல வழியில்லாமல், கழிவு நீரும், கலந்து குடியிருப்புகளில், வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஓடைக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஓடை முழுமையாக துார்வாரப் படவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், நகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட துாரம் ஓடையை துார்வாரும் பணிகளை மேற்கொண்டது. இருப்பினும், பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக மீண்டும், ஓடையில் கழிவு நீர் செல்வது தடைபட்டு, தற்போது, ஓடை பல இடங்களில் மண் மேடாக காட்சியளிக்கிறது; ஆங்காங்கே புதர் மண்டியும் கிடக்கிறது.தங்கம்மாள் ஓடையை துார்வாரி, கான்கிரிட் கரைகள் அமைக்கப்படும் என பல ஆண்டுகளாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஓடையில், கழிவு நீர் கலப்பதை தடுத்து, நீராதாரத்தை மீட்க வேண்டும் என்ற உடுமலை நகர மக்களின் எதிர்பார்ப்பு கானல்நீராக மாறி விட்டது. இந்த தேர்தலிலும் தங்கம்மாள் ஓடை சீரமைப்பு வாக்குறுதியாகவே தொடரும் அவல நிலை காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X