அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளை மேம்படுத்துவேன் அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் உறுதி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் நீர் நிலைகளை மேம்படுத்தி, நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி விவசாயம் செழிக்க செய்வேன் என அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறினார். விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் நேற்று விக்கிரவாண்டி, காணை ஒன்றியங்களில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நந்தன்கால்வாய் திட்டத்தை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் நீர் நிலைகளை மேம்படுத்தி, நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி விவசாயம் செழிக்க செய்வேன் என அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் நேற்று விக்கிரவாண்டி, காணை ஒன்றியங்களில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நந்தன்கால்வாய் திட்டத்தை செயல்படுத்தியும், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள், பாசன கால்வாய்களை சீரமைத்து தொகுதியில் விவசாயத்தை செழிக்க செய்வேன்.தொகுதிக்கு அரசு கல்லுாரியை கொண்டு வருவது எனது முதல்பணி. முதியோர் ஓய்வு ஊதியம் வீடு தேடி வந்து வழங்கப்படும்.இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க இலவச பயிற்சி மையம் ஏற்படுத்தி தந்திட, எனக்கு குக்கர் சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்.

பிரசாரத்தின், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் ஜெயமூர்த்தி, ஞானசேகரன், குமார், முருகன், சுப்ரமணி, நகர செயலாளர் பாலாஜி, நகர தலைவர் திருநாவுக்கரசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் சூடாமணி, எஸ்.டி.பி.ஐ., தொகுதி தலைவர் முஸ்தபா, துணைத்தலைவர்கள் அன்சர் அலி, சுலைமான், துணை செயலாளர்கள் ஜாபர், பாருக், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கோதண்டபாணி, ரமேஷ் சுபாஷ், நகரச் செயலாளர் சுரேஷ்குமார், துணை செயலாளர்கள் பிச்சைமுகமது, ஈஸ்வரன், மாணவரணி செயலாளர் முருகன், இளைஞரணி தலைவர் தமிழ்ச்செம்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X