அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதியின் வளர்ச்சி, மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்: காங்., வேட்பாளர் மணிரத்தினம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று காங்., வேட்பாளர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் விவசாயத்தை முக்கிய பிரதான தொழிலாக மக்கள் கொண்டுள்ளனர். விவசாயத்திற்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி ஊக்குவிப்பு செய்யப்படும். விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று காங்., வேட்பாளர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் விவசாயத்தை முக்கிய பிரதான தொழிலாக மக்கள் கொண்டுள்ளனர். விவசாயத்திற்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி ஊக்குவிப்பு செய்யப்படும். விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க வனங்களை ஒட்டி தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்கப்படும். கிராமப்புறங்களில் சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

அதிகாரிகளை தேடி மக்கள் செல்லும் நிலையை மாற்றி, இல்லம் தேடி அதிகாரிகள் வந்து கோரிக்கைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிசைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றி தருப்படும்.வறுமையில் வாடும் மக்கள் வாழ்வில் ஏற்றமடைய, படித்து முடித்து வேலை இல்லாத இளைஞர்களின் தகவல்கள் முழுவதும் சேகரித்து, தனியார் துறை ஊக்குவிப்புடன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.பல்வேறு சிறு, குறு தொழில்கள் துவங்க ஊக்குவிக்கப்படும். அதற்கான கடனுதவிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் தொகுதியில் மக்களின் வளர்ச்சிக்காவும், வாழ்வாதாரம் மேம்படவும் எவ்வித புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இதனால், பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே மக்கள் உள்ளனர்.இதனால், மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். இதை யாராலும் தடுக்க முடியாது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி ஏழைகளின் ஆட்சியாக இருக்கும். இத்தேர்லில் அ.தி.மு.க.,விற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். தொகுதியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X