பொது செய்தி

தமிழ்நாடு

இடம் பெயரும் காட்டுயானைகள்: எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இருந்து கேரள வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம் பெயர்வதால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், யானைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் வால்பாறைக்கு வரத்துவங்கின. இது தவிர, வால்பாறையில் நிரந்தரமாகவும் யானைகள் முகாமிட்டுள்ளன.தனித்தனி கூட்டமாக எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல்

வால்பாறை:வால்பாறையில் இருந்து கேரள வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம் பெயர்வதால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், யானைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் வால்பாறைக்கு வரத்துவங்கின.
இது தவிர, வால்பாறையில் நிரந்தரமாகவும் யானைகள் முகாமிட்டுள்ளன.தனித்தனி கூட்டமாக எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிட்டு, அங்கு பயிரிடப்பட்ட வாழை மரங்களை உட்கொண்டன. சில நேரங்களில் குடியிருப்பு மற்றும் கடைகளை இடித்தும் சேதப்படுத்தியது. இதனால் விடிய, விடிய தொழிலாளர்கள் துாக்கம் இழந்து, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.இந்நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக, வால்பாறையில் முகாமிட்ட யானைகள் தற்போது கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் சீசனுக்காக முகாமிட்டிருந்த யானைகள், பன்னிமேடு வழியாக கேரளாவுக்கு இடம் பெயர்ந்துள்ளன. வால்பாறையில் நிரந்தரமாக உள்ள யானைகள் கிழ்நீராறு, புதுத்தோட்டம், வில்லோனி, கல்லார் செட்டில்மென்ட் பகுதியில் முகாமிட்டுள்ளன.வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வனப்பகுதியில் கிடைப்பதால் அவை வெளியே வருவதில்லை. கேரள வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்த யானைகள் மீண்டும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வால்பாறை வனப்பகுதிக்கு வரும். யானைகள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X