சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா விழுப்புரத்தில் மூவர் சிக்கினர்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற மூவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். விழுப்புரம் வண்டிமேடு, மருதுார் மற்றும் மந்தக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, நேற்று மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.அதன்பேரில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங், டி.எஸ்.பி., நல்லசிவம் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற மூவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

விழுப்புரம் வண்டிமேடு, மருதுார் மற்றும் மந்தக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, நேற்று மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.அதன்பேரில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங், டி.எஸ்.பி., நல்லசிவம் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, வண்டிமேடு மற்றும் மருதுாரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த நபர்கள், அதிகாரிகளை கண்டதும் தப்பியோடிவிட்டனர்.தொடர்ந்து மந்தக்கரையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த இருவரை 8.500 ரூபாயுடன் பிடித்து டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று, வண்டிமேட்டில் பணம் கொடுத்த வாலிபரை 5,000 ரூபாயுடன் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.பிடிபட்ட மூவரிடம், எந்த கட்சிக்கு ஆதரவாக பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X