அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் சக்தி எனக்கு வெற்றி தேடி தரும்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : பகண்டைகூட்ரோட்டில் பிரசாரத்தை நிறைவு செய்த அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு, மக்கள் சக்தி எனக்கு வெற்றி தேடி தரும் என பேசினார். ரிஷிவந்தியம் அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு, நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை மாலை 6.30 மணிக்கு பகண்டைகூட்ரோட்டில் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தொகுதி மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். நான் வெற்றி பெற்றால் இத்தொகுதிக்கு நல்லது

தியாகதுருகம் : பகண்டைகூட்ரோட்டில் பிரசாரத்தை நிறைவு செய்த அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு, மக்கள் சக்தி எனக்கு வெற்றி தேடி தரும் என பேசினார்.

ரிஷிவந்தியம் அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு, நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை மாலை 6.30 மணிக்கு பகண்டைகூட்ரோட்டில் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தொகுதி மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். நான் வெற்றி பெற்றால் இத்தொகுதிக்கு நல்லது நடக்கும் என நம்புகின்றனர். எனது தந்தை சிவராஜை போல், பல ஆக்கபூர்வ திட்டங்கள் கொண்டு வந்து தொகுதியை முன்னேற்றுவேன், பிரசாரம் துவங்கியதில் இருந்து நிறைவு செய்யும் வரை ஒத்துழைப்பு அளித்த அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அ.ம.மு.க., மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சாமிதுரை, வெங்கடேசன் வழக்கறிஞர் ேஷசலஷ்மிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகர், ரவி, மகளிர் அணி வசந்தா, தே.மு.தி.க., தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட துணை செயலாளர் வசந்தா, ஒன்றிய அவைத்தலைவர் கோதண்டபாணி, ஒன்றிய அவை தலைவர் ரகு, துணை செயலாளர் சதாசிவம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X